திருத்தேவன்குடி, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர்.கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என அவ்வாலய தல வரலாறு தெரிவிக்கின்றது. மேலும் அவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி கைங்கரிய ஸபா எனும் குழுவினரால் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அயோத்தியில் இராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றதை முன்னிட்டு தேவங்குடியில் உள்ள கோதண்டராம ஸ்வாமி கோவிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஸ்ரீஇராம நாம ஜபம் தொடர்ந்து, மதியம் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது,
மேலும் கோவிலில் உள்ள சீதாதேவி கோதண்ட இராமர் லட்சுமணர் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பால், சந்தனம், தயிர், தேன், உள்ளிட்ட பலவகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் மலர்கள் கொண்டு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் அருள்மிகு ஸ்ரீ கோதண்ட இராமருக்கு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தேவங்குடி, நீடாமங்கலம், மன்னார்குடி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.






















