புதுச்சேரி, ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..

சமீபகாலமாக தமிழகத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர்.

இந்த நாய் அப்பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிந்து வருகின்றது. அதனை சட்டென்று பார்க்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.  அதன் பிறகு உற்று நோக்கி பார்க்கும் போது நாய்க்கு வேடம் இட்டுயிருப்பது தெரிய வந்து நிம்மதியாக செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தக் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here