கும்பகோணம், டிச. 13 –

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.

2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதானிய திருவிழா கொண்டாடப்படுகிறது..

அதன் ஒரு பகுதியாக இன்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர்களை சார்பில் அப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை சாஸ்திர பல்கலைக்கழக புல தலைவர் பேராசிரியர் ராமசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப் பேரணி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து சிறுதானியங்கள் பற்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் சிறு தானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு, திணை, வரகு, சாமை, கம்பு, பணி வரகு, சோளம் போன்ற பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள் மாணவர்கள் காட்சிப்படுத்திருந்தனர்.

மேலும் மாணவர்கள் சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி தகவல்களை கட்டுரை சுவரொட்டி மற்றும் மேடைப்பேச்சு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் என்சிசி அதிகாரி கேப்டன் செந்தில்நாதன், மற்றும் லெப்டினன்ட் எட்வர்ட் சாமுவேல், மற்றும் என்சிசி மாணவர்கள் மாணவிகள் அதிகாரிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here