திருவாரூர், ஜன. 02 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புத்தக கண்காட்சி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி 03 முதல் பிப்ரவரி 12 வரை புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகவும்,  புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ள இடத்திற்கான தேர்வு குறித்தும், திருவாரூர் புத்தக திருவிழாவிற்கென தனி அடையாளம் சின்னம் உருவாக்குவது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப் பட்டுள்ளது.

மேலும், புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்வது குறித்தும், அனைத்து பள்ளிகளிலும் புத்தக வாசிப்புதிறனை மேம்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு மாணவரும் புத்தகம் வாங்குவதற்கான சேமிப்புத்திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் தங்க ஏற்பாடு செய்வது குறித்தும், புத்தககண்காட்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here