பொன்னேரி, மார்ச். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்கக் கோரி பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பொன்னேரி சார் ஆட்சியரிடம் மனுவளித்தனர்.

பொன்னேரி வட்டாரத்திற்கு உட்பட்ட செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணி புரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்க கோரி பொன்னேரி சாராட்சியரிடம் வழக்கறிஞர் ராஜா தலைமையில் 10 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து மனு அளித்தனர்.

மேலும் அம்மனுவில் அவர்கள் பொன்னேரி வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் அறுக்கும் சூளைகள் இயங்கி வருவதாகவும், அதில் பணி புரிவதற்காக குழந்தை தொழிலாளர்களை பயன் படுத்தி வருவதாகவும், அதனால் அவர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட அனைத்தும் அரசின் சமுதாய மேம்பாட்டு கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாகவும், அதனால் சட்டத்திற்கு விரோதமாக அந்நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியிருப்பதும், மேலும் அவர்களை தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிராக கொத்தடிமைகளாக பணியமர்த்திருப்பதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகும், மேலும் அச்சிறார்களை உடனடியாக மீட்டிட வேண்டும் என்பதை வலியுத்தி பொன்னேரி சாராட்சியரிடம் அவர்கள் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்குழந்தைகள் தொடர்ந்து பள்ளிகளில் கல்வி பயில நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுயிருந்தனர். மனுவினைப் பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் மனு மீதான உரிய ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here