முதலமைச்சர் விபத்தில் இறந்தவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மற்றொரு காவலரை மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் சென்றுப் பார்த்து ஆறுதல் கூறினார். 

சென்னை, நவ. 2 –

இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டடத்தின் அருகில் இருந்த பழமை வாய்ந்த பெரிய மரம் ஒன்று மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்ததில், முத்தால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் திருமதி. கவிதா உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் இருந்த அவரது குடும்பத்தினருக்கு தனது ஆறுதல் தெரிவித்தார். மேலும் இதே விபத்தில் காயம் அடைந்து ராஜிவ்காந்தி மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் போக்குவரத்து காவல் தலைமைக் காவலர் திரு. முருகன் அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜெ.விஜயராணி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here