தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.

 தற்போது ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை மரக்கன்றுகள் விவசாயம் செய்து வருகிறார், தென்னை மர கன்றுகளில் ஊடுபயிராக மூன்று ஏக்கரில், தலா ஒவ்வொரு ஏக்கர் வீதம் கத்தரி, தட்டாம் பயிறு, பருத்தி என விவசாயம் செய்து வருகிறார்.

இந் நிலையில் மூல வைகை ஆற்றில் நேற்று பெய்த கன மழையால் கரையோரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் மழை நீர் பெருகி பயிர்கள் நாசமாகின

இதைத் தொடர்ந்து ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், கிராம அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகிய இருவரும் ஈஸ்வரன் தோட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் ஆய்வு செய்த கிராம அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் விளை நிலங்களுக்கு உரிய தொகையை வழங்க தமிழக அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மானிய விலையில் பயிர்கள் அல்லது உரிய தொகையை பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்து சென்றனர்.

 பாதிக்கப்பட்ட விவசாயி கூறும் பொழுது காட்டாற்று வெள்ளம் வரும் பொழுது எங்கள் தோட்டத்தில் அதிக பயிர்கள் நாசம் ஆவதால் தடுப்புச் சுவர் கட்டி கொடுக்கும்படி அந்த பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கையும் வைத்தனர்.

இந்த தடுப்பணை மட்டும் வந்துவிட்டால் எங்களுடைய நிலங்களில் நிறைய விவசாயம் செய்து நல்ல லாபம் பெறுவோம் என்று விவசாயி ஈஸ்வரன் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here