காஞ்சிபுரம், அக். 27 –

காஞ்சிபுரம் சுகாதாரத்துறை அலுவலகத்தில் கல்லூரி நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கப் படுவதாக நம்பகத்தன்மையுள்ள தகவல்கள் ஊழல் தடுப்புத் துறைக்கு கிடைத்ததின் அடிப்படையில், கடந்த அக் 18 ஆம் தேதியன்று ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காஞ்சிபுரம் பிரிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரிகளுடன் இணைந்து துணை இயக்குநர் சுகாதார அலுவகத்தில் திடீர் சோதனையை நடத்திவுள்ளனர்.

இந்த திடீர் சோதனையில் துணை இயக்குநர் பழனியிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.1,66,910 ம், தொகுதி சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து ரொக்கம் ரு.26,490 ம், தொகுதி சுகாதார அலுவலர் இளங்கோவிடம் இருந்து ரொக்கம் ரூ.8,900 என ஆக மொத்தம் கணக்கில் காட்டப்படாத பணம் இம்மூவரிடம் இருந்து ரூ. 2, 02, 300 கைப்பற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து அக் 19 அன்று துணை இயக்குநர் பழனி வீட்டில் நடைப்பெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.3,22,900 மும் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லாக்கர் சாவியும் கைப்பற்றினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று அக். 26 அன்று பழனி பெயரில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி திருமங்கலம் கிளையில் உள்ள அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்ததில் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ரூ. 29,80,500 மும், 150 சவரன் தங்க ஆபரணங்களும் கண்டுப்பிடித்துள்ளனர். அதில் ரூ.29,80,500 ரொக்கப்பணத்தை மட்டும் ஊழல்தடுப்புத்துறை அலுவலர்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். மேலும் அந்த லாக்கரில் இருந்த 150 சவரன் தங்க ஆபரணங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டுவுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here