நாமக்கல், ஆக. 12 –
முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி. உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார்.
மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது நேற்று 11.08.2022 ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து , குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
மேலும் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் இன்று 12.08.2022-ஆம் தேதி சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அச்சோதனை நிறைவுப்பெற்று முக்கிய ஆவணங்கள், லாரி மற்றும் கார் கைப்பற்றி இருப்பதாகவும் 3 தோல் பைகளில் ஆவணங்கள் எடுத்து சென்றனர். மேலும், பணம் நகை கைப்பற்றவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர். ஆவணங்களை கொண்டு சென்ற போது அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பி ஒழிக என குரல் எழுப்பினர்.























