காஞ்சிபுரம், மே. 01 –
தமிழகத்தில் நெகிழியை பயன்படுத்த தமிழக அரசு தடை செய்து அதற்கான பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் மாநகரில் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை மாநகரில் ஒழித்திடும் வகையில், ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்வின் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இம் மாரத்தனை மாநகராட்சி மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரத்தில் ஸ்கேடிங் அகாடமி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மாரத்தான் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் துவங்கிய மாரத்தானை, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தானில் 5 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் துவங்கிய ஸ்கேட்டிங் மாரத்தான் நான்கு ராஜவீதி, பேருந்து நிலையம், காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், மேட்டு தெரு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது
பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் துணி பையை பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்க பதாதைகளுடன் இந்த மாரத்தான் நடைபெற்றது.





















