திருவாரூர், மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்

அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும்   25 .03 .2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுப்படப் போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்துள்ளனர். இன்று நியாய விலை கடைகளையும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளையும் மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் நியாயவிலைக் கடை பணியாளர் மாலை 6 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று கைரேகை பதிவு செய்ய வற்புறுத்தப்படக்கூடாது, கூட்டுறவு சங்கங்கள் எம்.எஸ்.சி.ஏ.ஐ.எப் திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்துவது தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பட்டதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் திருவாரூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன் கூறும் போது, அரசு உடனடியாக எங்களை அழைத்து பேசி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் எதிர்வரும் 25 .03 .2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவார்கள் எனவும் ஆகவே அரசு எங்களது கோரிக்கைகளை உடனடியாக அழைத்துப் பேசி நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here