காஞ்சிபுரம், ஆக. 12 –

காஞ்சிபுரம் அருகே ஒளிமுகமதுபேட்டை பகுதியில்  உள்ள மின்சாரவாரிய அலுவலகம் வளாகம் அருகேவுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மர்ம நபர்கள் யாரோ இன்று காலை காவி துண்டு அணிவித்து சென்றுள்ளனர்.

அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காஞ்சிபுரம் – வேலூர் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த நபரை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், அம்பேத்கர் சிலை மீது போடப்பட்ட காவி துண்டை காவல்துறையினர் அகற்றிவிட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இப்பிரச்சினைக் குறித்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here