ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மிக பிரமாண்டமாக நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏர்வாடி ஊராட்சி மிகவம் பிரசித்தி பெற்றது. இங்கு ஏர்வாடி தர்கா உள்ளதால் ஆண்டு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே சுகாதாரத்திற்கு ஏர்வாடி ஊராட்சி தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சிறப்பு கிராம சபை கூட்டம் கல்பார் கிராமத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) வீரப்பன் சிறப்பு பற்றாளராக பங்கேற்று மக்களுக்கு விளக்கமளித்தார். அவர் பேசுகையில் குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்படும், வீட்டில் குடிநீர் வீணாகமல் பயன்படுத்த வேண்டும்.கொசுக்கள் மூலம் டெங்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார். பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.பிஎம்ஓய்ஏ வீடு குறித்தும் விளக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு வழிமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் வறட்சி பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று சத்துணவு மையத்தை ஆய்வு செய்து சத்துணவு அமைப்பாளரிடம் கீரை, முருங்கை போன்றவைகளை வளர்க்க அறிவுரை வழங்கினார். கடலாடி ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் ஜீவகன் பற்றாளராக பங்கேற்றார். ஊராட்சி செயலாளர் அஜ்மல் கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். கூட்டத்தில் ஹமீது இபுராகிம், கலீஸ் ஜலாலுதீன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அமீன்மாலிக், ஷேக் அலி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here