பொன்னேரி, ஏப். 25 –

தமிழகம் முழுவதும்  இரண்டாம் கட்டமாக அதிமுக அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் கழக அவைத்தலைவர் உள்ளிட்ட 9 பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அமைப்பு தேர்தல்  ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் பொறுப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் ஜேசிடி பிரபாகரன் முன்னிலையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு  மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்த சிறுணியம் பி.பலராமன்  மீண்டும் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார். வேறு யாரும் இவரை எதிர்த்து யாரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை, எனவே மீண்டும் பலராமன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தேர்தல் பொறுப்பாளர்கள் அரிவித்தனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற சிறுணியம் பி பலராமனுக்கு தொண்டர்கள் மலர் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here