காஞ்சிபுரம், ஏப். 25 –
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி – (40) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மகன் விஜய் காஞ்சிபுரத்தில் +2 படித்து வருகிறார். மேலும், இவர்களது மகன் விஜய்க்கு கடந்த ஒரு மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு சரிவர பள்ளிக்கு செல்வதில்லை என்று அவர்கள் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் தனியாக வீட்டில் இருந்த மாணவன் விஜய், நாளை பள்ளிக்கு செல்வதாக இருந்த நிலையில், தன் நிலை பற்றி சக மாணவர்கள் கேலிக் கிண்டல் செய்வார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் விஜயின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாணவனின் தற்கொலைக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















