கும்மிடிப்பூண்டி, மே. 29 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு முற்போக்கு சங்க கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். பின்னர் செயலாளர் மதன் அறிக்கைகளை வாசித்தார் மாவட்ட துணைத்தலைவர் அருள் மற்றும் பாரி நிறைவுரையாற்றினார்கள்.

முன்னதாக இடியோசை குழுவினர் வழங்கிய பறையிசை ஸ்டெப் 7 அகாடமி டான்ஸர் கோகிலா லட்சுமி வழங்கிய பசியை புசிப்போம் நாடகத்துடன், உணர்வு மிக்க பாடல், தெருக்கூத்து, கவியரங்கம், கருத்தரங்கம் என பல்சுவையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் மாரி, ராஜேந்திரன், ஜெய நாராயணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க இரா சரவணன் நன்றியுரையாற்றினார்.

தொடர்ந்து, தமுஎகச கும்முடிப்பூண்டி கிளை நிர்வாகிகளாக தலைவராக தனூஷ்கோடி, துணைத் தலைவராக மதன், சிவலிங்கம், விஜயன் செயளாலர் முனுசாமி, துணைச் செயலாளர்களாக சுரேஷ், கவிஞர் பரமசிவன், இரணியன் மற்றும் பொருளாளராக சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here