ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தேவந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருநேவநாத ஈஷ்வரர் திருக்கோயில்.
இக்கோயிலின் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று அக்கிராமத்தில் வெகு சிறப்பாக காலை 9 மணி முதல் 10 .30 மணியிலான சுப தினத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் சுற்று வட்டாரம் மற்றும் உள்ளூர் மக்களென தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று கோபுர மற்றும் சாமி தரிசனம் செய்து சுவாமியை வழிப்பட்டனர்.
இதன் முன்னர் இக்கோயில் புனரமைப்பு பணிகள் மிகுந்த பொருட் செலவில் முடிக்கப்பட்டு, கடந்த 18 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் கிராம தேவதை வழிபாடுடன் தொடங்கப்பட்டு அன்று 9.30 மணிக்கு மேல் அனுக்ஞை, மகா கணபதி பூஜை, புண்யாகவஜனம், ஸங்கல்பம், கோ பூஜை, மகா கணபதி ஹோம ம், புதிய விக்ரகங்கள் கரிகோலம் அஷ்டாசத்கிரியை சயனாதிவாசம் பூர்ணஹூதி தீபாராதனை நடைப்பெற்றுது.
தொடர்ந்து மூன்று கால பூஜைகள் முடிந்து ஹோமகுண்ட பூஜையில் இருந்து புண்ணிய தீர்த்த நீர் கலசங்களில் எடுத்து வரப்பட்டு இன்று காலை கோபுர கலசங்களில் ஊற்றி தீபாதாரனை காட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் கோயில்களை சுற்றி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் புண்ணிய தீர்த்த நீர் அனைவரின் மீதும் தெளிக்கப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் கண்டு மகிழ்ந்தனர்.






















