திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சோழபுரம் பெரியகாலனி கருணாநிதி தெருவில் வசிக்கும் கோபால் என்பரின் 24 வயதுடைய மகன் அருண் என்பவர் மீது மாவட்ட காவல்துறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்; செப், 06-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜன 1 முதல் நடப்பு மாதம் 5 ஆம் தேதிவரை மொத்தம் மணல் கடத்தல் மற்றும் திருட்டுச் சம்பந்தமாக மொத்தம் 854 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 823 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கடத்தலுக்காக அவர்கள் பயன்படுத்திய 199 லாரிகள், 160 டிராக்டர்கள், 166 வேன்கள், 21 ஜே.சி.பிகள், 171 இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள், 14 டிப்பர் லாரிகள் 203 மாட்டு வண்டிகள் என மொத்தமாக 934 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் தொடர் மணல் கடத்தலிலும், கொள்ளையிலும் ஈடுப்பட்டு வந்த கோபால் என்பவரின் மகன் அருண் மீது மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இரவிக்குமார் உத்திரவின் பேரில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட தலைமை காவல்துறை செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.