தஞ்சை, அக். 26 –
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆடுதுறையில் கோடைகால சாகுபடியில் உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை மற்றும் விவசாய தளவாட சாமான்கள் வழங்கினர்.
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கோடைகால சாகுபடியில் உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது நிகழ்ச்சியை தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வி மெய்யநாதன் தமிழக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி செழியன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்புரையாற்றினார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை உரையாற்றினார் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள் விவசாய தளவாட சாமான்கள் வழங்கப்பட்டது மேலும் கோடைகால சாகுபடியில் உளுந்து பயிர் சாகுபடி செய்வது குறித்தும் இத்தகைய பணிக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஒன்றிய பெருந்தலைவராக திருநாவுக்கரசு ஜெயரவிச்சந்திரன் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர் தொழில்நுட்பம் குறித்து தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் அம்பேத்கர் சிறப்புரையாற்றினார். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி எனும் கலை நிகழ்ச்சியும் நடந்தது.