pic – file copy
பென்னாலூர்பேட்டை, மார்ச். 07 –
திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ நாளான நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று பென்னாலூர் காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் முத்து ஆரணிப்பகுதி காசிரெட்டிப்பட்டி கிராம பக்கமாக ரோந்துப்பணியில் ஈடுப்பட்டுயிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செல்வம் வயது 30 கனிம வளமான மணலை சிமிண்ட் சாக்குப்பையில் எடுத்துக் கொண்டு வரும் போது, போலீசாரை கண்டதும் வண்டியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மணல் கடத்தலுக்காக அவர் பயன்படுத்திய இரண்டு சாக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் மேற்படி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.




















