கும்மிடிப்பூண்டி,மார்ச். 08 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தின் அருகே சந்தேக படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் கன்னிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 47 என்பவரிடம் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் 5 பொட்டலங்களில் பையில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அதனைத்தொடர்ந்து அவ்வாலிபரை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.