தஞ்சாவூர், மே. 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது.

அதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் , தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் சக்கராப்பள்ளி சமூக பூங்கா பகுதியில் திறந்த வெளியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

அய்யம்பேட்டை அஞ்சுமன் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் மனம் உருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

 

பேட்டி: அக்பர் ஜமாத் தலைவர் சக்கரப்பள்ளி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here