கும்மிடிப்பூண்டி, மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பேட்டையில் இயங்கி வரும் தனியார் குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் அத் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப் படுத்தாமல் பயன்படுத்தி வந்ததாகவும் மேலும் அதன் இருப்பிற்கு மேற் பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட உச்சகட்ட வெப்ப சலனத்தால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பாதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கழிவுப்பொருட்கள் சேகரிப்பு குடோனில் சேகரிக்கப்பட்டுள்ள ஆயில் பேரல்கள் வெடித்து சிதறுவதால் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.. மேலும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் தாமதமாக வந்ததாக கூறப்பட்ட நிலையில் அத்தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்து தீயணைப்பு வாகனம் திரும்பி சென்றது.
மேலும் அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலைய வாகனங்கள் வர தாமதமான நிலையில் தொடர்ந்து தீயின் வேகம் அதிகரித்தது. அதனால் சுற்று வட்டார பகுதிகளான பாப்பன்குப்பம், சிந்தலகுப்பம், புது கும்முடிபூண்டி , சிறு புழல் பேட்டை உள்ளிட்ட பல கிராமங்கள் புகைமண்டலமாய் காட்சியளித்தது.
ஒரு மணி நேரமாக தீயானது காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளில் தீ பரவும் அபாய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்பு வீர ர்களின் துரித நடவடிக்கையால் அத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு தீயினை நீண்ட போராட்டத்திற்கு பின்பு அணைத்தனர்.