கும்பகோணம், ஜூலை. 02 –

கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர்க்கான பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நடைபெற்றது.

மேலும் இம்முகாம், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்க்குமார், மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள், புதிதாக காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கு ஆர்வமுள்ள இருபாலரும் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் உரை நிகழ்த்திய காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் …

தகுதித் தேர்வு செல்பவர்கள் (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்), பொது அறிவு (விஞ்ஞானம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய அரசியல், தற்கால நிகழ்வுகள்), உளவியல் (தருக்கப் பகுப்பாய்வு, எண் பகுப்பாய்வு, தகவல்தொடர்புத் திறன், செய்திகளைக் கையாளும் திறன், அறிவாற்றல் திறன்) ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவும், மேலும் தினமும் 4 தமிழ் நாளிதழ்களை வாங்கிப் படிக்க வேண்டும் எனவும், குற்ற சம்பவங்கள் குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அப்போது அவர் அறிவுறுத்தினார்.

இதில் மதுரையைச் சேர்ந்த பழனிகுமார் பயிற்சியினை நடத்தினார். சார்பு ஆய்வாளர் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல்துறை சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here