கும்பகோணம், டிச. 03 –
விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் அவர்கள் மின் வாரியத்தை தனியார் மையமாக்குதல் மற்றும் தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் குரல் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத்தலைவர் குடந்தை அரசன் கண்டன உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் 2003 மின் திருத்த சட்டத்தின் படி மோடி தலைமையிலான மத்திய அரசு, மின்சார துறையை தனியார் மையம் ஆக்குவதை கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்து, துன்புறுத்துவது, மற்றும் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, படகுகள், மீன்கள், மீன்பிடி வலைகள் மீன்பிடி கருவிகளை அபகரித்து செல்வது, தமிழக மீனவர்களை கொலை செய்வது என சிங்கள பாசிச இராணுவத்தின் அடாவடித்தனத்தை தடுக்க தவறிய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தை.சேகர் தலைமையேற்றிருந்தார். மற்றும் ஒன்றிய செயலாளர்கள் முரளி, ஹிட்லர், வில்லியம்ஸ், துரை.பிரபு பொதுச் செயலாளர் ரேடியோ வெங்கடேசன், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சாக்கோட்டை ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் அமானுல்லா, திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், ஒருங்கிணைந்த அரசு ஊழியர் பேரவை மாவட்ட செயலாளர் அசுரன், இளந்தமிழ்ப்புலிகள் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் குடிதாங்கி கார்த்தி, உள்ளிட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.