தஞ்சாவூர், மே. 21-

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

வைகாசி மாத சோமவார பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here