கும்பகோணம், ஜன. 24 –
இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்று 8 வருடங்கள் முடிந்தது விட்டது. ஆனால் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை அவ்வரசு தற்போது நிறைவேற்றவில்லை எனவும், மேலும், மக்களுக்கு சேவை செய்கின்ற வங்கி, இன்சூரன்ஸ், நிலக்கரி, இரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் நாட்டின் அனைத்து வளங்கள் என அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சங்க சட்டங்களை திருத்தி அமைத்தது. மேலும், மின்சார திருத்த சட்டம் 2022, பட்டு கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு, உள்ளிட்டவைகளை தற்போதுவரை ஒன்றியத்தில் ஆண்டுவரும் மோடி அரசு தவறான கொள்கைகளை எடுத்து வருவதாக குற்றம் சாட்டி ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
மேலும், அம்மறியல் போராட்டத்தின் போது அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் ரூ 21,000ம் நிர்ணயம் செய்யவும், மாத ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூபாய் 6,000 ஆம் வழங்கிடவும், போக்குவரத்து கழக பணியிடங்களை தனியாரிடம் வழங்க கூடாது, போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 8 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு வழங்கிடவும், நுகர் பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் நிலையங்களில் சட்ட விரோதமாக சம்பள பிடித்தம் செய்வதை கைவிடவும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும், மேலும், தெரு வியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவது, நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதி உதவிகளை அதிகப்படுத்துவது, தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்வதை கைவிடுவது, ஆட்டோ தொழிலை பெரிய நிறுவனங்கள் போட்டியிலிருந்து பாதுகாப்பது, அரசு ஆட்டோ செயலியை உருவாக்குவது, ரேசன் கடைகளில் ஏழை,எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட இருப்பதை கைவிடுவது, மேலும் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மயத்தை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான எடுத்து வரும் மோடி அரசு அதனை உடனே கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேலும் இந்த மறியல் போராட்டம், ஏஐடியூசி சார்பில் கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட குழு தில்லைவனம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி ஒன்றிய செயலாளர் பாலா மணிமூர்த்தி சீனு சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.























