திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
செவிலியர்களின் நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செவிலியர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட அச்சங்கத்தின் நிர்வாகிகள் பேசுகையில்,
செவிலியர்களுக்கு வெளிப்படையான நேர்மையான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தாத அரசின் நிலையால் செவிலியர்கள் முறைகேடாக பணியிட மாறுதல் பெற்று வருவதற்கு துணைப் போகும் அதிகாரிகளின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தமிழக அரசு பழிவாங்குவதாகவும், செவிலியர்கள், மருத்துவர்கள், அனைத்து ஊழியர்களுக்கு நடைபெற உள்ள கட்டாய பணியிட மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும், செவிலியர்களுக்கு பல்வேறு இன்னல்களை அளித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் அரசின் போக்கால் பொதுமக்களுக்கான சேவையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் தமிழக அரசு செவிலியர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றனர்.