சென்னை, மார்ச். 12 –
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 48-வயதான வடிவேல் என்பவர், இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்விகி யில் உணவு டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளான இன்று அவர் வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, நாவலூர் பிரதான சாலையில் இருந்து ஓஎம்ஆர் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்த சிமிண்ட் கலவை லாரி, தாழம்பூர் மசூதி அருகே எதிரே வந்தவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியதில், இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் வடிவேல் தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திலிருந்து வடிவேலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வடிவேலுவும் அவரது நண்பர் ஆறுமுகமும் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது, மேலும் இவ்விபத்தில் ஆறுமுகம் நிதானத்தை இழந்து நிலைதடுமாறி வாகானத்துடன் சாலையில் பின்னால் கீழே விழுந்ததுள்ளதும், பின்னால் அமர்ந்திருந்த வடிவேல் மட்டும் இவ்வித்தில் மாட்டிக்கொண்டு பலியானது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் வட்டம் தெரிவிக்கிறது.