காஞ்சிபுரம், மார்ச். 12 –
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த சாத்தணஞ்சேரி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழா சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் திமுகவின் கொடியேற்றி முதல்வர் பிறந்தநாள் விழா கேக் வெட்டியும் இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. அதனை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்த இலவச மருத்துவ முகாமில் சாத்தணஞ்சேரி, மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.





















