கும்பகோணம், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் என்பது கைத்தறி பட்டு சேலைக்கு முகவும் பிரபலமான ஊராகும், மேலும் அங்குள்ள தி கோ சிலக்ஸ் (எ) திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் கூட்டுறவு சங்கமாக உள்ளது. மேலும் அதில் 1800 க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் தேதி நடைபெற்ற சங்க பேரவை கூட்டத்தில், வெறும் 200 உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், அதில் 3 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும், 2 உறுப்பினர்களை நீக்கம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அக்கூட்டத்தில் குறைந்தபட்சம் 900 உறுப்பினர்கள் பங்கேற்றால்தான் அத்தீர்மானம் செல்லுபடியாகும். ஆனால் குறைந்தப்பட்ச உறுப்பினர்கள் பங்குப்பெற்ற அக்கூட்டத்தில் இயற்றியதீர்மானம் செல்லுபடியாகதென தெரிவித்து அச்செயலைக் கண்டிக்கும் வகையில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில், தி கோ சில்க்ஸ் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
அதில் மாவட்ட பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் கிளி ராஜேந்திரன், சாமுவேல், ஒன்றிய தலைவர் சந்திரசேகரன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில துணைத்தலைவர் உமாபதி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பட்டு கைத்தறி நெசவாளர்கள், பாஜக நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது இவ்வுண்ணாவிரத போராட்டத்தில், மத்திய அரசின் நிதியில் முறைகேடு செய்யும் நிர்வாகத்தின் செயலை கண்டித்தும், ஜனநாயக முறைப்படி போராடிய நெசவாளர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு தண்டிக்கும் வகையில் செயல்படும் நிர்வாகத்தை கண்டித்தும் பேரவை கூட்டத்தில் போடப்பட்ட பெய்யான தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும் இவ்வுண்ணாவிரத போராட்டம் நடைபெற்றதாக அக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.