காஞ்சிபுரம், மார்ச். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு “பெண்கள் சக்தியை போற்றுவோம்” என்றவாறு பாஜக மகளிர் அணியினர் குரலெப்பி சென்ற பிரச்சாரப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

மேலும் அப்பேரணியில் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கோஷங்களை எழுப்பியவாறு பாஜக மகளிர் அணியினர் முக்கிய வீதிகளின் வழிநாக பேரணியாகச் சென்றனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் நல திட்டங்களை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி சார்பில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சக்தியை போற்றுவோம் எனும் பிரச்சாரப் பேரணியை நடத்திட பாரதிய ஜனதா கட்சி தலைமை உத்தரவிட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் பாஜக மகளிர் அணியினர் கலந்து கொண்ட பெண்கள் சக்தியை போற்றுவோம் பிரச்சாரப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அணி தலைவர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற பிரச்சார பேரணியை பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு  துவக்கி வைத்தார்.

மகளிர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்கள் என அப்பிரச்சாரப் பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்கி கோஷமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

மகளிர் அணியினர் நடத்திய பிரச்சாரப் பேரணியில் மகளிர் அணியின் நிர்வாகிகள் ராஜகுமாரி, கோடீஸ்வரி, டாக்டர் ஜமுனா ராஜி,பாஜக நிர்வாகிகள் ஜீவானந்தம், ஜானகிராமன், பூபதி,செந்தில், ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் மகளிர் அணி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here