கும்பகோணம், ஜூலை. 05 –
தமிழகத்தை ஆளும் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓராண்டு கடந்த பின்னரும், இதுவரை தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதனை கண்டித்தும், அதனை நினைவூட்டும் வகையில் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் இன்று நடைப்பெற்றது.
அதன் ஒருபகுதியாக, தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், கும்பகோணம் மானிங் ஸ்டார் பள்ளி அருகே நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்
தமிழகத்தை ஆளும் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இக்கட்சி தமிழக மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றி கண்டது, ஆனால் வெற்றி பெற்று தற்போது ஓராண்டை நிறைவு செய்த பிறகும், வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற அரசு அக்கரை காட்டவில்லை, இதனை நினைவூட்டும் வகையில், பாஜக சார்பில் மாநிலம் தழுவிய அளவில், மாவட்டம் தோறும் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் கும்பகோணம் மார்னிங் ஸ்டார் பள்ளி அருகே உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது இதில் தஞ்சை வடக்கு மாவட்ட, கும்பகோணம் மாநகர, நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் பங்கேற்றுள்ளனர்




















