காஞ்சிபுரம்,செப். 29 –

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

இதனை தொடரந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,  தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கடந்த நான்கு மாதங்களில் முதல்வர் செயல்படுத்தி வருகின்ற திட்டங்கள் தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த திட்டங்களை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவித்தார் உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மக்களிடம் நல்ல நம்பிக்கை பெற்றுள்ளது என கூறினார்.

மேலும், தமிழக எதிர்கட்சி தலைவராக பொருப்பேற்று முதல்முறையாக காஞ்சிபுரம் வருகை தந்த எடபாடிபழனிசாமி அண்ணா நினைவு இல்லத்திற்க்கு செல்லவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்த அமைச்சர் தங்கம்தென்னரசு அண்ணா பெயரில் அதிமுகவினர் வைத்துள்ள மரியாதை குறைவு அண்ணா பெயரையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் வீணாக்கியது அதிமுக ஆட்சி அண்ணாவின் மீது அவர்களுக்கு எந்த அளவு பற்று இருப்பது  என உங்களுக்கு தெரியும் அண்ணா பெயரை வைத்த்துக் கொண்டு அதிமுக நாடகமாடி வருகின்றது என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here