கும்கோணம், ஏப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ், மற்றும் சாரு …

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார் லைன் கல்லூரி அருகே  கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்ட அரசு புறநகர் பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் அவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் பேருந்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் அவ்விபத்துக்கான காரணம் குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மானாங்கோரை பஸ் கவிழ்ந்த விபத்தில் இறந்த லட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தனது வேண்டுதலை நிறைவேற்ற நடந்தே சென்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

மேலும் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பின்பு ஊருக்கு திரும்புவதற்காக விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பஸ் கவிழ்த விபத்தில் படுகாயம் அடைந்து லட்சுமி பலியானார்.

இந்த விபத்தில் இறந்த ஒரே ஒருவர் மட்டும் அதுவும் லட்சுமி என்பது மட்டுமே குறிப்பிடத்தக்கது. கோயிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற சென்ற லட்சுமி பிணமாக வீடு திரும்பியதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here