தஞ்சாவூர், மார்ச். 01-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையார் கருவறை முன்பு 12 வயது சிறுமியும். 6 வயது சிறுவனும் வெண்கல குரலில், , தூய தமிழ் உச்சரிப்பில் மனம் உருகி மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டனர். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள குழந்தைகள் பாடிய பாடலை மெய்மறந்து கேட்டு சென்றனர்.
தமிழர்கள் பெருமையை உலகம் முழுவதும் பறை சாற்றி கொண்டு இருக்கும் தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெருவுடையாரை வழிபட தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெருவுடையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர்.
கூட்டத்தில் இருந்து கணீரென்ற குரலில் ஆதி சிவனே என்ற பாடல் ஒலி கேட்டது. பாடல் ஒலித்ததும் கூட்டத்தில் இருந்த சலசலப்பு அமைதியானது. கூட்டம் முன்னேற முன்னேற பாடல் ஒலி மிக அருகில் கேட்டது. பாடல் வந்த பக்கம் பார்த்தால் இரண்டு குழந்தைகள் சிவபுராணம் பாடியவாறு வந்தனர்.
பெருவுடையார் கருவறை முன்பு சென்ற இரண்டு குழந்தைகளும் கைக்கூப்பி. மனம் உருகி நமச்சிவாய வாழ்க. நாதந்தாழ் வாழ்க என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை ஏற்ற இறக்கத்துடன் தூய தமிழ் உச்சரிப்பில் பாடி பெருவுடையாரை வழிபட்டனர்.
வழிபாடு முடித்து சன்னதியை விட்டு வெளியே வந்த இரண்டு குழந்தைகள் பற்றி விவரம கேட்ட போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், ருக்மணி .(12) அவரது சகோதரன் தேவசேனாபதி(6) என்றும் தெரிவித்தனர்.