`மிஸ்டர்.லோக்கல்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி தமிழில் அறிமுகமாகிறார் என்று படக்குழு நேற்று அறிவித்தது.
கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் `ரா’ கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் `வான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.