ஆவடி, ஏப். 13 –

ஆவடி இரயில்நிலையத்தில் நேற்று நடைப்பெற்ற இருப்பு பாதையை கடந்து செல்லும் போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்லூரி மாணவிகளால் மைம் விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவிகள் மைம் வாயிலாக இருப்பு பாதையில் நின்று கொண்டு செல்பி எடுப்பதால் விளையும் ஆபத்து மற்றும் இருப்பு பாதையில் ரயில்கள் வரும்போது இருசக்கர வாகனத்தில் கடப்பதால் விளையும் விபத்துக்களை காட்சிப்படுத்திக் காட்டினார்கள் அதனை கண ஏராளமான பொதுமக்கள் கண்டு விழிப்புணர்வு பெற்றும் மாணவிகளை பாரட்டிச்சென்றனர். இதனைத் தொடர்ந்து செல்போன் பேசிக்கொண்டும், காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டவாறும் மற்றும் இருசக்கர வாகனத்தில் இரயில் வரும் போது  இருப்பு பாதையை கடக்க முற்பட்டோரை தடுத்து ரயில்வே போலீசார் எச்சரித்தும், அறிவுறுத்தியும் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here