திருவாரூர், மார்ச். 16 –
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கு செயல்பட்டு வரும் துணை மேலாளர் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் 11 பேர் கொண்ட காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நுகர் பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




















