புதுடெல்லி:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தவாறு இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here