தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சையில் நடைபெற்ற “கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ப்ளஸ் 2 வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். தொடர்ந்து ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஹனாஸ் இலியாஸ் சிறப்புரை வழங்கினார்.
தொடர்ந்து மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன்வளத்துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும் இதரபாடப்பிரிவுகள் குறித்து துறை வல்லுநர்கள் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான வருவாய் துறை அலுவலர்களின் ஆலோசனைகள், வங்கி மேலாளர்கள் வழியே கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபர் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்..
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் , பயிற்சியாளர்கள் அளித்த பேட்டியில்..
பெரும் நகரங்களில் நடைபெறுவதை போல் , பல்வேறு துறை சார்ந்த மேற்படிப்பிற்க்கான தகவல்களை ஒரே இடத்தில் பெற முடிந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது, இவ்வாய்பை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
மாணவிகள், ITI பயிற்சியாளர்





















