காஞ்சிபுரம், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவில் 13 மாநிலங்கள் கலந்து கொண்ட சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கம் மற்றும் வெள்ளி வென்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாணவர்களை இன்று காலை 11 மணி அளவில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள சமூக ஆர்வலர் முத்துகுமார் அவரது அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களை பாராட்டி, சால்வை அணிவித்து, ஊக்கத் தொகையாக ரூ.6000 வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் படப்பை விஷ்ணு நகரில், பிரபஞ்சம் தற்காப்பு கலை பயிற்சி கழக நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர், உலகளாவிய பயிற்சியாளர், தேசிய சிலம்பம் நடுவருமான நிவேதா மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மோனிஷ்வர், பரணிதரன், விஷ்ணு பிரியா, தேவதர்ஷினி, கீர்த்தனா, பொன்னி, நித்திஷ் ராஜ், நித்தின் ஸ்ரீ, ரித்விக், குணாளன், சந்தோஷ், தமிழரசன், தரணி, அஸ்வத், ஸ்ரீஜித்பிரசாத் ஆகியோர் இருந்தனர்.
மேலும் தங்கம், வெள்ளி, பத்தகங்களை வென்று முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ, மாணவிகள் மலேசியாவில் ஜூன் 28 நடைபெறும் உலகளாவிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிட்டத் தக்கதாகும்.
முதல் முதலில் தமிழ்நாட்டில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 8 மாணவர்கள், ஜூலை 10 ந் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை உலகளாவிய அளவில் சிங்கப்பூரில் நடைபெறும் கராத்தே சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள தேர்வாகி உள்ளனர்.