பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள அரசு மருத்துவ மனையில் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்பாக வைக்க போதிய அளவில் குளிர் சாதன பெட்டி இல்லையெனவும், மேலும் அங்கு ஏற்கனவே இருக்கின்ற குளிரசாதன பெட்டிகளும் சரியான முறையில் வேலை செய்யவில்லை எனவும் அவர்கள் புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையிலும், இந்த மருத்துவமனையில் இரண்டு குளிர் சாதன பெட்டிகள்தான் பயன்பாட்டில் உள்ளதாக அம்மருத்துவமனை பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறைந்த அளவில் உள்ள அப்பெட்டிகளை வைத்துதான் அம் மருத்துவ மனைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாத்து வைத்து மறுநாள் உடல் கூறு ஆய்வு செய்யப் படுவதாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட உடல்கள் வந்தால் அவைகளை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த மருத்துவமனையில் உள்ள குளிர்சாதன பெட்டி கடத்த சில மாதங்களாகவே சரியான முறையில் இயங்கவில்லை என்ற புகார் இருந்தும் கூட நேற்று பொன்னேரி அருகாமையில் உள்ள பெரும்பேடு என்ற கிராமத்தை சேர்ந்த குப்பன் வயது 34 என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் உடலை உடல் கூறு ஆய்வு செய்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அப்பொழுது செயல்படாத குளிர்சாதனப் பெட்டியில் இறந்தவரின் உடலை வைத்து விட்டு செல்லும்படி மருத்துவமனை ஊழியர் கூறிவுள்ளார். அதன்படி இறந்தவரின் உறவினர்கள் அதில் வைத்து விட்டு காலையில் உடல் கூறு ஆய்வு செய்வதற்காக வந்து பார்த்த பொழுது உடலின் மூக்குப்பகுதி இல்லாமல் இருந்தது.
அதுக் குறித்து கேட்டபோது மருத்துவமனை ஊழியர் எலி கடித்திருக்கும் என்று கூறியதாக இறந்தவரின் உறவினர்கள் கூறினர். அதன் காரணமாக ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு வந்த பொன்னேரி காவல் நிலைய அதிகாரிகள் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உடலை பெற்றுச் செல்லும்படி கூறியதன் காரணமாக உறவினர்கள் உடலை பெற்று சென்றனர்.
மேலும் அதுக் குறித்து மருத்துவமனை மருத்துவரிடம் நாம் கேட்ட பொழுது குளிர்சாதன பெட்டி வேலை செய்யவில்லை அதனால் இது போன்ற சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. புதிய குளிர்சாதன பெட்டி பொருத்தப்பட்டு வருகிறது அது 15 நாட்களுக்குள் பொருத்தப்பட்டு விடும் என்றும். ஆனால் பொதுப்பணித்துறையை சேர்ந்த எலக்ட்ரீசியன் அதை இணைப்பதற்கான மின் இணைப்பு தராததால் எங்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படுவதாக மருத்துவமனையை சேர்ந்த பெனடிக் என்ற மருத்துவர் நம்மிடம் தெரிவிக்கிறார்.
பொன்னேரியில் மிக முக்கிய அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக உயிரிழந்தவர்களின் உடலை வைக்கும் குளிர்சாதனப்பெட்டி இல்லை என்பது மருத்துவர்களுக்கு தெரிந்தும் கூட சில ஊழியர்கள் செய்யும் வேலையால் மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும். மேலும் குளிர்சாதன பெட்டியை வேலை செய்ய வைப்பதற்கான மின் இணைப்பை தராதிருக்கும் பொதுப்பணி துறையை சேர்ந்த ஊழியர்களாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டி – தனசேகர் பெரும்பேடு கிராமம்























