மயிலாடுதுறை, மே. 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அதில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 4289 மாணவர்களும் 5355 பெண்களும் என மொத்தம் 9644 பேர் தேர்வெழுதினார்கள்.

மேலும் அத் தேர்வில்  3872 ஆண்கள்,  பெண்கள் 5037 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 90.15% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு சற்று அதிகரித்து 92.38 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 29வது இடத்தில் தேர்ச்சி சதவீதத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த ஆண்டு 35 அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் 80.16சதவீதம் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆண்டு ஐந்து சதவீதம் அதிகரித்து 85.41% வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பைட்:-

சாய் கண்ணம்மை – 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here