கும்பகோணம், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் பழைய மீன் மார்க்கெட் அருகில் கடந்த 2000 ஆம் ஆண்டு பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்பு லைன் வெடித்ததால் நெடுஞ்சாலையில் தீடீரென அச்சாலையில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்தது.
மேலும் அதுக்குறித்து தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் சாலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து செல்வம் திரையரங்கம் முதல் பழைய மீன் மார்க்கெட் வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




















