மன்னார்குடி, டிச. 26 –
இயேசுகிருஸ்து பிறந்த தினத்தினை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
அதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சரும் , நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் ஆர்.பி.சிவம் ஆகியோர் பங்கேற்றனர். அந்நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கிருஸ்துவ மக்களுடன் ஒன்றிணைந்து அவ்விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசு கிராம் , ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் , முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் டி.என்.பாஸ்கர் , பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



















