மயிலாடுதுறை, மே. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி திருவிழா நடைபெற்றது. எழ மகளூர் கிராமத்தில் மிக பழைமையான, பல்வேறு குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளக்க கூடியது கௌமாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தீமிதி திருவிழா, குறவன் குறத்தி ஆட்டம் நாடகம் என மூன்று நாட்கள் நடைபெறும்.

தீமிதி திருவிழாவை, ஒட்டி, கிராம மக்கள் விரதமிருந்து, நேற்று நண்டலாற்றில் இருந்து கரகம் எடுத்து வீதி உலா வந்தது. பின், கோயில் அருகில் வயல் வெளியில், அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த கௌமாரியம்மன் எதிரில் தீ குண்டம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் தீ குண்டத்தில், கரகம் இறங்கும் முன் ஆடு பலி கொடுக்கபட்டு, கரகம் தீ குண்டத்தில் இறங்கியது இந்நிகழ்வு விநோதமாக உள்ளது. மேலும் இந்த தீமிதி திருவிழாவை சுற்றி உள்ள கிராம மக்கள் சுமார் 1000 பேருக்கு மேல் கண்டு பக்தி பரவசமடைந்தனர்.

தொடர்ந்து வந்திருந்த பக்தர்களும், கிராம மக்களும் கண்டு களிக்க வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து குறவன் குறத்தி ஆட்டம், நாடகம் என மூன்று நாட்களும், இந்த சித்திரை திருவிழாவை முன்னிட்டு, அக் கிராமத்தில்,  திருவிழா களை கட்டி தமிழர்களின் கலை உணர்வை எடுத்து பறைசாற்றுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here