தஞ்சாவூர், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் ஆசுராம், கிர்தாராம் இவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் வாடகை வீட்டில் தங்கி வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று புதுக்கோட்டையில் வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்களை மொத்த விற்பனை செய்வதற்காக 12 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்தப் பின்பு,  மீதமுள்ள 7 கிலோ வெள்ளி ஆபரணங்களுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்து அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து அவர்களுக்கு சொந்தான இருசக்கர வாகனத்தில் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் பின்னால் பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழியை மறித்து அவர்கள் கண்களில் மிளகாய் பொடி தூவி விட்டு அவர்கள் வைத்திருந்த வெள்ளியுடன் கூடிய இரண்டு பைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

மேலும் அவர்களை பின் தடர்ந்து துரத்திச் சென்றபோது தஞ்சை ஜெபமாலபுரம் அருகே இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி சென்றுவுள்ளனர்.

அக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நகை வியாபாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சை மேற்கு காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவ் வழிப்பறிக் கொள்ளைத் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிவோடிய மர்ம கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here