காஞ்சிபுரம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
அவ்வகையில் காவல்துறைக்கு உடனிருந்து பணியாற்றும் ஊர்க்காவல் படையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா காவல் மைதானத்தில் ஊர்க்காவல் படை சார்பில் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டோ மேரி ஸ்டெல்லா ஏற்பாட்டில் 100 % வாக்குப்பதிவு ஏற்படுத்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணியில் ஊர்க்காவல் படையினர் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஜனநாயகம் காட்பது கடமை, 100% வாக்குப்பதிவு ஏற்படுத்த பதாகைகள் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளான மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி என நகரின் முக்கிய சாலை வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முரளி மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் சங்கர சிவசண்முகம், தாலுகா காவல் ஆய்வாளர் அம்பேத்கர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் லோகநாதன், உதவி கமாண்டர் சரவணன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.