கும்கோணம், ஜன. 22 –

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற பிப்ரவரி இரண்டாவது வாரம் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு நிறைவேற்றித்தர வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.

சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க  மாநில செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின்மாநில தலைவர் வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது.

மேலும், இக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்  ரவிச்சந்திரன் பொருளாளர் ஏழுமலை மாநில செயலாளர் தங்க.காசிநாதன் தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் சாமி. நடராஜன் மாவட்ட தலைவர் செந்தில்குமார் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக. முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கரும்பு விவசாயிகள் மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

மேலும் இக்கூட்டத்தில்  திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து இதுவரை வழங்கப்படாமல் இருக்கின்ற கரும்பு நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும்,

வருவாய் பங்கீட்டு முறை கூட்டத்தை ரத்து செய்து மாநில அரசு நிர்ணயிக்கப்பட்ட கரும்பு ஆதார விலையை மாநில அரசு அறிவிக்க வேண்டும் எனவும், மேலும், ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் நடைபெற்ற டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும்,

எதிர்வரும் ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு  முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைப்பெறயிருக்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்வது எனவும்,

மேலும், கடந்த ஆண்டு 2022 நவம்பர் 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து 54 நாட்களாக போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையான திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளின் ஆதார விலை, ஆலையின் லாபத்தில் பங்கீட்டடுத் தொகை அனைத்தும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்றவாறும்,

மேலும், விவசாயிகளுக்கு தெரியாமல் மோசடியாக வங்கியில் விவசாயிகள் பெயரில் பெற்ற கடனை உடனடியாக திரும்பச் செலுத்தி கடன் இல்லா சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சுவாமிமலையில் நடைப்பெற்ற விவசாயிகளின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து வருகிற பிப்ரவரி இரண்டாவது வாரம் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறயிருப்பதாகவும் அப்போது மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here